விசித்திரமான பிரச்சனையில் மாட்டிக் கொண்ட இலியானா..

விசித்திரமான பிரச்சனையில் மாட்டிக் கொண்ட இலியானா..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இலியானா. அப்போது பல முன்னணி நடிகர்களுக்கும் இலியானா தான் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. ஒருபக்கம் இவரது வெற்றி காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இவருடைய தனித்துவமான நடிப்பும் காரணமாக அமைந்தது.

ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே அவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது. அதனால் தெலுங்கு ஓரங்கட்டிவிட்டு பாலிவுட் பாலிவுட் சினிமாவிற்கு குடியேறினார். தெலுங்கில் எப்படி பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல ஹிந்தியிலும்பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் ஒரு சில நடிகர்களுடன் மட்டுமே நடித்து சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. இதனால் பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனால் அமர் அக்பர் அந்தோணி என்ற படத்தின் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். இருப்பினும் தற்போது இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதில்லை அதற்கு என்ன காரணம் என்று தற்போது தான் தெரிய வந்துள்ளது.

அதாவது தெலுங்கு சினிமாவில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் தயாரிப்பாளர் ஒருவர் படத்தில் நடிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அப்பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார் இலியானா. இதனால் இலியானாவிற்கு மறைமுகமான ரெக்கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ரெட் கார்டு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த ஒரு படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்காது. இதே போல தான் நடிகர் வடிவேலு 24ஆம் புலிகேசி என்ற படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். ஆனால் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் இவருக்கும் இடையில் மோதல் ஏற்பட படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு வடிவேலு சென்றுவிட்டார்.ஆசிரியர் - Editor II