சட்டவிரோத குடியேற்றாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மக்ரோன் தீவிரம்!

சட்டவிரோத குடியேற்றாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மக்ரோன் தீவிரம்!
நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத குடியேற்றாளர்களை வெளியேற்றும் பணியை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தீவிரப்படுத்தியுள்ளார். 
 
நேற்று புதன்கிழமை, ஜூன் 9 ஆம் திகதி எலிசே மாளிகையில் 'வீடியோ கான்பிரன்ஸ்' ஊடாக இடம்பெற்ற ஜனாதிபதி சந்திப்பில் பிரதமர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, சட்டவிரோத குடியேற்றத்தை இனிமேல் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என ஜனாதிபதி வலியுறுத்தினார். 
 
வருடம் ஒன்றுக்கு 120.000 பேர் புகலிடம் கோருகின்றனர். அவர்களில் 20.000 பேருக்கு புகலிடம் வழங்கப்படுகிறது. 20.000 பேர் நாட்டை விட்டு திருப்பி அனுப்படுகின்றனர். மீதமான 80.000 பேரின் கோரிக்கைகள் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கும் போது அவர்கள் சட்டவிரோதமாக இங்கேயே தங்கி விடுகின்றனர். 
 
எவ்வாறாயினும் புதிய குடியேற்றாளர்களை  அனுமதிக்கக்கூடிய வீதம் மிக மிக குறைவாகவே உள்ளது. இதனால் புகலிடம் கோருபவர்களுக்குரிய ஆவணங்களை காலவிரயம் இன்றி முடிவெடுத்து, நிராகரிக்கப்படுபவர்களை உடனடியாக நாட்டை விட்டி வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்றைய சந்திப்பின் போது மேற்படி தீர்மானத்தை ஜனாதிபதி மக்ரோன் தீர்க்கமாக வலியுறுத்தினார்.
ஆசிரியர் - Editor II