தமிழகத்தில் ஒரே நாளில் 405 பேர் பலி!

தமிழகத்தில் ஒரே நாளில் 405 பேர் பலி!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 405 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 28,170 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றை விட (18,023) சற்று குறைந்து 17,321 ஆக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி(ஜூன் 9) ஒட்டுமொத்தமாக 22,92,025 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டள்ளனர், அதில் 20,59,597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.

வீட்டில் உட்பட மொத்தம் 2,04,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், கடந்த 24 மணிநேரத்தில் 31,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2319 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது மற்றும் 62 பேர் பலியாகியுள்ளனர்.


ஆசிரியர் - Editor II