கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீவிபத்துக்குள்ளான MV X - Press pearl கப்பலில் எண்ணெய் கசிவு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீவிபத்துக்குள்ளான MV X - Press pearl கப்பலில் எண்ணெய் கசிவு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீவிபத்துக்குள்ளான MV X - Press pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது போன்ற புகைப்படங்களை கடல் மாசுபாட்டைக் கண்கானிக்கும் marine pollution surveillance report என்ற அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடல் பகுதிகளில் காலநிலை மாற்றத்தை கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படும் செயற்கைகோள் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் 3 கிலோமீற்றர் தூரமளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை கடற்பரப்பில் நிலவும் காற்றுடனான காலநிலை காரணமாக, எண்ணெய் மேலும் பல பகுதிகளுக்கு பரவலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பல் அமைந்துள்ள பகுதியை சுற்றி 12 கடல் மைல் வரை இந்த எண்ணெக் கசிவு நீடிக்கக்கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் அமைந்துள்ள இடத்திலிருந்து எண்ணெய் வடகிழக்கு வரை விரிவடைவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II