ஆபத்தான பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் ...

ஆபத்தான பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் ...

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேறிய, ஆபத்தான பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே இன்று காலை மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையோரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதுடன், குறித்த பகுதிக்குச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாகச் சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாகப் பார்வையிட்டு வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II