முதல்முறையாக புகழ்ந்து தள்ளியுள்ள கங்கனா ரனாவத்

முதல்முறையாக புகழ்ந்து தள்ளியுள்ள கங்கனா ரனாவத்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குயின் என்ற படத்தின் மூலம் முதல் முறையாக தேசிய விருது வாங்கினார். அதேபோல் அடுத்த ஆண்டு தனு வெட்ஸ் மனு என்ற படத்திற்காக மீண்டும் ஒரு தேசிய விருது வாங்கினார். அதனால் பாலிவுட் ரசிகர்கள் கங்கனா ரனாவத் “குயின் ஆஃப் பாலிவுட்” என புகழாரம் சூட்டினார்கள்.

கங்கனா ரனாவத் மற்ற நடிகைகளைப் போல கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருடத்திற்கு பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனால் கங்கனா ரனாவத் அதற்கு மாறாக நல்ல கதை, சிறப்பான கதாபாத்திரம் இருந்தால் மட்டும்தான் நடிப்பேன் என கூறி வருகிறார்.

அப்படி இவரது நடிப்பில் வெளியான ஒவ்வொரு படத்திலும் இவருக்கு ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரங்களை இயக்குனர்கள் கொடுத்திருப்பார்கள். தற்போது கூட ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தலைவி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி பிரபலங்கள் தாண்டிப் ரசிகர்கள் பலரும் கங்கனா ரனாவத் புகழ்ந்து தள்ளினர்.

அதற்கு காரணம் அச்சுஅசலாக ஜெயலலிதா போலவே இவரது தோற்றமும், நடிப்பும் இருந்தது. தற்போது இப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் வெளிப்படையாக கேட்டு வருகின்றனர். கங்கனா ரனாவத் வருடத்திற்கு இவர் வாங்கும் சம்பளத்தில் 45% வருமான வரித்துறைக்கு செலுத்தி விடுவேன் அந்த அளவிற்கு பல படங்கள்பல படங்களில் நடிப்பேன்.

ஆனால் சமீபகாலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பு நடத்தவில்லை. அதனால் அதிகமான படங்களில் நடிக்கவில்லை. வாழ்க்கையில் முதல்முறையாக நான் வருமான வரி செலுத்த முடியவில்லை என கூறியுள்ளார். மேலும் தாமதமாக வருமான வரி செலுத்தியதால் அரசு அபராதம் விதித்துள்ளதாகவும் இதனை மனப்பூர்வமாக ஏற்பதாகவும் கூறியுள்ளார்.

அதாவது பிரபலங்களாக இருந்தாலும் எல்லாருக்கும் சமமானவர் என்பதை வருமானவரித்துறை உணர்த்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனிநபருக்கு வருமான வரி செலுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த காலத்தை கடந்து விடலாம் என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II