சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல் !

சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல் !

சமையல் எரிவாயு பயன்படுத்துவோர் தங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து எரிவாயுவைப் பெறும் திட்டம் விரைவில் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் கோடிக்கையான மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்தி வருகின்றனர். இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்துதான் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து பெற முடியும்.


தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து வாடிக்கையாளர்கள் கேஸ் முன்பதிவு செய்து பெறுவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளீயாகிறது.

இதுகுறித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், புனே,ராஞ்சி, குர்கான், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் விநியோகஸ்தர்களிடம் இருந்து எரிவாயுவைப் பெறும் வசதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II