காலை உணவு அருந்திக்கொண்டிருந்தவரிடம் €40.000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகை கொள்ளை!!

காலை உணவு அருந்திக்கொண்டிருந்தவரிடம் €40.000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகை கொள்ளை!!
காலை உணவு அருந்திக்கொண்டிருந்த ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 
 
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை Noisy-le-Sec நகரில் இடம்பெற்றுள்ளது.  rue Paul-Vaillant-Couturier வீதியில் உள்ள மெக்டொனால்ட் துரித உணவகத்தின் முற்றத்தில் (Terraces) உணவருந்திக்கொண்டிருக்கும் போது, இரண்டு பேர் குறுக்கிட்டனர். தலைக்கவசம் அணிந்து ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும், குறித்த நபரை தாக்கி, அவரிடம் இருந்த €35.000 யூரோக்கள் மதிப்புள்ள Audemars Piguet நிறுவன கைக்கடிகாரம்,  €5.000 யூரோக்கள் மதிப்புள்ள தங்கச் சங்கிலி உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். 
 
கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை Bobigny நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் - Editor II