விசாரணை கமிஷன் முன்பு எடப்பாடியும், பன்னீர் செல்வமும் ஆஜர் ஆவார்கள்- அமைச்சர் சி.வி.சண்முகம்

விசாரணை கமிஷன் முன்பு எடப்பாடியும், பன்னீர் செல்வமும் ஆஜர் ஆவார்கள்- அமைச்சர் சி.வி.சண்முகம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணை கமிஷன் முன்பு எடப்பாடியும், பன்னீர் செல்வமும் ஆஜர் ஆவார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விசாரணை கமிஷன் முன்பு எடப்பாடியும், பன்னீர் செல்வமும் ஆஜர் ஆவார்கள்- அமைச்சர் சி.வி.சண்முகம்
விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு இன்று மதியம் அமைச்சர் சி.வி.சண்முகம் வந்தார்.

பின்பு அவர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், விழுப்புரத்தில் இருந்து திருச்சி மற்றும் சேலத்துக்கும் இடைநில்லா பஸ்களை இயக்கி வைத்தார்.

அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்துக்கு வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, அடுத்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளாராரே?

பதில்:- அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

கே:- சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு அதிகம் எதிர்ப்பு உள்ளதே?

ப:- இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவதூறாக கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அரசும் இதை கண்காணித்து வருகிறது.


கே:- டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷன் முன்பு, இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்.சும் ஆஜராவார்களா என்று கேட்டுள்ளாரே?

ப:- சம்மன் அனுப்பப்பட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர் - Editor II