குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மூன்று வரவேற்பு மையங்கள்!!

குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு மூன்று வரவேற்பு மையங்கள்!!
குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சிறப்பு வரவேற்பு முகாம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கான பணிகளை  l'Assistance Publique-Hôpitaux de Paris ஆரம்பித்துள்ளது.   பரிஸ் நகரசபையுடன் இணைத்து இந்த புதிய வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் Bichat மருத்துவமனையிலும், 13 ஆம் வட்டாரத்தில் Pitié-Salpêtrière மருத்துவமனையிலும், 4 ஆம் வட்டாரத்தில்  Hôtel-Dieu மருத்துவமனையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
பாலியல் துன்புறுத்தல், உளவியல், சித்திரவதைகள், கட்டாய திருமணம், பாலியன் துன்புறுத்தல், உடல்ரீதியான தாக்குதல்கள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்த மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதேவேளை, 3919 எனும் அவசர இலக்கமும் சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - Editor II