இணைய சமநிலைக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

இணைய சமநிலைக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு

இணைய சமநிலை கொள்கை தொடர்பாக டிராய் அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இணைய சமநிலைக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
புதுடெல்லி:

இணைய சமநிலை (நெட் நியூட்ரலிட்டி) என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் சேவை. அதாவது எந்த ஒரு இணையதள பக்கம் மற்றும் செயலிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது என்பதாகும்.

ஆனால், சில தனியார் நிறுவனங்கள் கூடுதல் இணைய பயன்பாட்டை எடுத்துக்கொள்வதால், அத்தகைய தளங்களை பயன்படுத்த தனித்தனியான கட்டணம் விதிக்கப்படும் என இணைய சேவை நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில்  மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரப்படும் என உறுதியளித்தது.

அதன்படி இணையத்தில் சுதந்திரமாக இயங்குவதற்கான சம உரிமைக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்காக தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் அளித்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதுதொடர்பாக தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் கூறுகையில், ‘இணையதள சேவைகளை முடக்குதல், அதிவேக இணையப் பயன்பாடு அளித்தல் ஆகியவற்றில் பயனர்களுக்கு தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டி வருவதற்கு தடை வதிக்க வகை செய்யும் விதிமுறைகளை டிராய் பரிந்துரை செய்தது. அதற்கு தொலைத் தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மேலும் புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கும் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.’ என்றார்.

இணைய சமநிலை கொள்கை அமலுக்கு வந்துள்ளதால் இனி இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கோர முடியாது. 
ஆசிரியர் - Editor II