பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் இடம்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விபத்திற்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இதன்போதே மீனவர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.

ஆசிரியர் - Editor II