பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – அசெல

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – அசெல

இலங்கையில் இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், தற்போது 15 இலட்சத்து 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசி டோஸ் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தற்சமயம் கிடைத்துள்ளதாகவும் இந்த விடயம் குறித்து அநாவசியமாக அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆசிரியர் - Editor II