ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி

ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி

ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா பொருட்கள் மீதான சுங்க வரிகள், காப்புரிமை உள்ளிட்ட பலவகைக் கட்டணங்களைக் குறைப்பதற்கு உலக நாடுகள் உதவும்படி மோடி இதன்போது கேட்டுக்கொண்டார்.

கொரோனாவை முறியடிக்கவும் எதிர்காலத்தில் இது போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்கவும் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர் - Editor II