தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 இலட்சத்து 26 ஆயிரத்து 573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே அரசின் திட்டம் என்றும் எனவே, மக்கள் யாரும் தடுப்பூசி மையங்களுக்கு முண்டியடித்துச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர் - Editor II