இன்று அதிகபட்ச வெப்பம் பதிவு!!

இன்று அதிகபட்ச வெப்பம் பதிவு!!
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இவ்வாரத்தின் இறுதிநாட்களான நேற்று சனி, மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் அதிகபட்சமாக வெப்பம் பதிவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அதிகபட்சமாக 36 வெப்பம் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று நண்பகலின் பின்னர் அதிகபட்சமாக 37C வெப்பம் பதிவாக உள்ளது. Rhône மாவட்டத்தில் இந்த அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் பரவலாக 24 இல் இருந்து 35 வரை வெப்பம் நிலவ உள்ள நிலையில், Rhône மாவட்டத்தில் அதிகபட்சமாக இந்த வெப்பம் இன்று பதிவாக உள்ளது. 
ஆசிரியர் - Editor II