இந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகம்

இந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகம்

இந்தியா முழுவதும் ரயில்கள் ஊடாக 30 ஆயிரம் டொன் ஒட்சிசன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்கள்  ஊடாக ஒட்சிசன் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதாக  அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த ரயில்கள் ஊடாக 30 ஆயிரத்து 182 மெட்ரிக் டொன் திரவ மருத்துவ ஒட்சிசன் 1, 734 டேங்கர்களில் அடைத்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்துக்கு மாத்திரம் 4 ஆயிரத்து 941 மெட்ரிக் டொன் ஒட்சிசன் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II