அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்

அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்
யாழிற்கு விஐயம் செய்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பு இன்று இரவு யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவரது செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வாள்வெட்டு, கொள்ளை, துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.


ஆசிரியர் - Shabesh