வீடொன்றில் இருந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு!!

வீடொன்றில் இருந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு!!
நேற்று திங்கட்கிழமை வீடொன்றில் இருந்து உடல்சிதைந்த நிலையில், தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 
 
Sannois (Val-d'Oise)  நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  rue d'Argenteuil இல் உள்ள வீடு ஒன்றில் இருந்து 44 வயதுடைய தாய் ஒருவரது சடலமும், அவரது 17 வயது, 5 மற்றும் 2 வயதுடைய பிள்ளைகளின் சடலங்களும் மீட்க்கப்பட்டுள்ளன. 
 
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. carbon monoxide சுவாசித்ததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உடல்கள் சிதைவந்திருந்தாலும், வன்முறை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. இது தொடர்பான ஆய்வுகளை காவல்துறையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 
ஆசிரியர் - Editor II