வாட்ஸ்அப் பீட்டாவில் புதிய அம்சம் உருவாக்கப்படுகிறது

வாட்ஸ்அப் பீட்டாவில் புதிய அம்சம் உருவாக்கப்படுகிறது

வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்க புதிய அம்சம் உருவாக்கப்படுவது இணையத்தில் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. 

வாட்ஸ்அப் பீட்டாவில் புதிய அம்சம் உருவாக்கப்படுகிறது
கோப்பு படம்வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீடடா செயலியில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியின் நோட்டிஃபிகேஷன் சென்டரில் மார்க் ஆஸ் ரீட் (mark as read) என்ற ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது.

தற்சமயம் உருவாக்கப்படும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு மெசேஜ் வரும் போது, நோட்டிஃபிகேஷன் சென்டில் அதற்கு பதில் அளிக்க கோரும் ரிப்ளை (Reply) ஆப்ஷன் மட்டுமே தற்சமயம் ணப்படுகிறது. புதிய அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் உங்களுக்கு வரும் வாட்ஸ்அப் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்களில் ரிப்ளை ஆப்ஷனுடன் மார்க் ஆஸ் ரீட் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு குறுந்தகவலை நோட்டிஃபிகேஷன் சென்டரிலேயே படித்ததாக மார்க் செய்ய முடியும்.

இதுவரை இந்த அம்சம் வழங்கப்படாத நிலையில், நோட்டிஃபிகேஷன் சென்டரில் புதிய மியூட் பட்டன் வழங்க இருக்கிறது. இதை கொண்டு நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்தபடியே சாட்களை மியூட் செய்ய முடியும். எனினும் புதிய ஆப்ஷன்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும், படமும் இல்லை.
ஆசிரியர் - Editor II