வெளியீட்டுக்கு முன் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்

வெளியீட்டுக்கு முன் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

வெளியீட்டுக்கு முன் லீக் ஆன கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்
கோப்பு படம்


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மீண்டும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுவரை வெளியானதில் இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் கேலக்ஸி நோட் 9 மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் பர்ப்பிள் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 24-ம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் இதே நாளில் போலாந்து நாட்டில் இந்த ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஐஸ் யுனிவர்ஸ் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் புதிய புகைப்படங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக பர்ப்பிள்-கோல்டு நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாடலுடன் கோல்டு நிறம் கொண்ட எஸ் பென் வழங்கப்படுகிறது.
முந்தைய நோட் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய நிறம் பார்க்க விசித்திரமாக காட்சியளிக்கும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் புதிய நிறம் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் சாம்சங் சார்பில் அனுப்பப்பட்ட நோட் 9 அழைப்பிதழில் தங்க நிறம் கொண்ட எஸ் பென் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்: புளு, பிரவுன், பிளாக், லாவென்டர் மற்றும் கிரெ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. கடந்த  ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு, ஆர்சிட் கிரே மற்றும் டீப் சீ நிறங்களில் வெளியிடப்பட்டது. 

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதே தினத்தில் முன்பதிவு துவங்கி ஆகஸ்டு 24-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை PLN 4,299 இந்திய மதிப்பில் ரூ.79,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் - Editor II