ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸை பட்டியலில் சேர்த்த ஸ்ரீரெட்டி

ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸை பட்டியலில் சேர்த்த ஸ்ரீரெட்டி

தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ஆகியோரை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். 

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றசாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது.

கடந்த வாரம் ஒரு பேட்டியில், ’தெலுங்கு மட்டும் அல்லாது தமிழ் இயக்குனர் ஒருவராலும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். விரைவில் அதைத் தெரிவிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இயக்குனர் பெயர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் எனத் தெரியாமலேயே இருந்தது’.

பின்னர் சில நாட்களில் தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் ஸ்ரீரெட்டி அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை என்றார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார். அதில், 5 வருடங்களுக்கு முன்னர், ஐதராபாத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவின் பார்டி நடைபெற்ற பார்க் ஹோட்டல் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன் என்றும், கிளப்பில் இருவரும் சேர்ந்து நடனமாடிய போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியது நினைவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

தற்போது ராகவா லாரன்ஸ் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறா. அதில், ஐதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்சை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அவரது அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியந்தேன்.

ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். 

அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை" என பதிவு செய்துள்ளார். 
ஆசிரியர் - Editor II