கொரோனா பரவலின் வேகம் குறித்து சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!!

கொரோனா பரவலின் வேகம் குறித்து சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!!
இதுபோன்ற வேகத்தில் முன்னர் எப்போதும் கொரோனா பரவவில்லை என சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவிக்கையில், நேற்று திங்கட்கிழமை 18.000 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தை விடவும் இது 150% வீதத்தால் அதிகரித்துள்ளது என தெரிவித்தார். 'எங்களுக்கு இப்படி நடக்கும் என அறிந்திருக்கவில்லை. எதிர்பாராததை விடவும்  மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது. குறிப்பாக இளைஞர்களிடையே டெல்டா திரிபு அதிகமாக பரவி வருகின்றது!' என தெரிவித்தார். 
 
நான்காம் தொற்று அலை ஆரம்பித்துள்ளதாக அரச பேச்சாளர் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். தற்போது அது உறுதியாகும் வகையில் இன்றைய தொற்று நிலவரங்கள் உள்ளன. இன்றைய தொற்று மற்றும் சாவு நிலவரங்கள் பின்னர் வெளியாகும். 
ஆசிரியர் - Editor II