19 வயது காவல்துறை மாணவன் தற்கொலை!

19 வயது காவல்துறை மாணவன் தற்கொலை!

19 வயதுடைய காவல்துறை மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளான். Essonne மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 
Brétigny-sur-Orge நகரில் வசிக்கும் குறித்த மாணவன், தனது  வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். 19 வயதுடைய குறித்த மாணவன், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ADS மாணவனாக (காவல்துறை படிப்பு பயிலும் மாணவன்) பயிற்சி பெற்று வந்துள்ளான். 
 
இந்நிலையில்ம் நேற்று திங்கட்கிழமை காலை அவன் துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான். மாணவனது மறைவுக்கு தேசிய காவல்துறை இரங்கல் வெளியிட்டுள்ளது. 
 
பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அவனது தந்தையின் பழைய துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தி அவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறியமுடிகிறது. 
ஆசிரியர் - Editor II