விபத்துக்குள்ளான பிரெஞ்சு இராணுவ விமானம்!!

விபத்துக்குள்ளான பிரெஞ்சு இராணுவ விமானம்!!
நேற்று செவ்வாய்க்கிழமை காலை பிரெஞ்சு இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. 
 
மாலி நாட்டில் இந்த விமான விபத்து இடமெப்ற்றுள்ளது. ‘சஹேல்’ நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சு இராணுவத்தினருக்கு சொந்தமான விமானமே விபத்துக்குள்ளானது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் Hombori  பகுதிக்கும் மேல் பறந்துகொண்டிருந்த குறித்த விமானம் திடீரென கட்டுப்பட்டை இழந்தது. உடனடியாக விமானத்துக்குள் இருந்த விமானி மற்றும் நேவிகேட்டர் மாலுமி ஆகியோர் விமானத்தில் இருந்து வெளியே பாய்ந்தனர். 
 
அவர்கள் பாதுகாப்பாக தரையிறங்கியதும், அவர்களை பிரெஞ்சு இராணுவத்தினர் உலங்குவானூர்தி மூலம் மிட்டுவந்தனர். 
 
விமானம் தரையில் விழுந்து நொருங்கியுள்ளது. விமானம் கட்டுப்பாட்டை இழந்ததற்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரெஞ்சு இராணுவத்தினர் பயன்படுத்தும் Mirage 2000 D வகை விமானமே விபத்துக்குள்ளானது. 
ஆசிரியர் - Editor II