ஜனாதிபதி மீது உளவு பார்த்த இஸ்ரேல் - பதிலளிக்கக் கோரும் எலிசே!!

ஜனாதிபதி மீது உளவு பார்த்த இஸ்ரேல் - பதிலளிக்கக் கோரும் எலிசே!!

கடந்த சில நாட்களாக பெகாசுஸ் செயலியின் தீவிரம் பேசுபொருள் ஆகியயுள்ளது. பெரும் நிறுவனங்கள் தங்கள் கணினி சேமிப்பகத்தை (SERVEURS) நிறுத்தும் அளவிற்கு இது தீவிரம் ஆகி உள்ளது.

செல்பேசிகளை உளவு பார்க்கும் பெகாசுஸ் செயலி திட்டம் « Projet Pegasus » இஸ்ரேலிய நிறுவனமான NSO உருவாக்கப்பட்டு, இஸ்ரேலிய உளவு நிறுவனம் தெரிவு செய்யப்பட்ட இலக்குகளை, அரசியல்வாதிகளை உளவு பாரத்துள்ளது.

இந்தச் செயலி, செல்பேசியில் ஊடுருவதன் மூலம், செல்பேசியிலுள்ள, படங்கள், குறுந்தகவல்கள், தொடர்புகள்,   Whatsapp போன்ற செயலிகளின் தகவற்பரிமாற்றங்கள் என அனைத்தையும் இந்தச் செயலி  திருடி, தங்கள் சேமிப்பகத்திற்கு அனுப்பி விடும். உங்களின் முற்றான தகவல்களும் அவர்களால் திருடப்படும்.

இந்தச் செயலியின் இலக்கில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனும் குறிவைக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உடனடியாக இஸ்ரேலின் உளவு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் எனவும், அனைத்தும் உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் ஜனாதிபதி மாளிகையான எலிசே தெரிவித்துள்ளது.

ஆசிரியர் - Editor II