மருத்துவர் மீது தாக்குதல்! - Bobigny இல் ஒருவர் கைது!

மருத்துவர் மீது தாக்குதல்! - Bobigny இல் ஒருவர் கைது!
மருத்துவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக Bobigny  நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கண்ணீர் புகையை கக்கும் துப்பாக்கி ஒன்றினால் மருத்துவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். 
 
இரு மருத்துவர்களுக்கு ஒரே நேரத்தில் அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளதாக எழுந்த வாக்குவாதம் ஒன்றின் முடிவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 
 
பின்னர் Bobigny  நகரில் வசிக்கும் குறித்த மருத்துவமனை ஊழியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
ஆசிரியர் - Editor II