திடீர் அறிவிப்பை வெளியிட்டு நயன்தாரா ரசிகர்களை உற்சாகப்படுத்திய விக்னேஷ் சிவன்

திடீர் அறிவிப்பை வெளியிட்டு நயன்தாரா ரசிகர்களை உற்சாகப்படுத்திய விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவள்' படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். 

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
இந்நிலையில், நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த திடீர் அறிவிப்பால் நயன்தாரா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக நடிகை நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II