ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அனிருத் பாடல்?

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் அனிருத் பாடல்?

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக ' ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம்வருபவர் அனிருத். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர அவ்வப்போது பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அனிருத்.

அந்த வகையில், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்காக அனிருத் பாடல் ஒன்றை பாட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் தயாராகி உள்ளதால், அந்தந்த மொழிகளுக்கான புரமோஷன் பாடலை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி ஒவ்வொரு மொழியிலும் இருந்தும் ஒரு பிரபலத்தை தேர்ந்தெடுத்து பாடலை பாட வைக்கப் போகிறாராம். அதன்படி தமிழ் பதிப்புக்கான புரமோஷன் பாடலை அனிருத் பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்பாடல் பதிவு நடைபெறும் என கூறப்படுகிறது.

ஆசிரியர் - Editor II