சினிமாவை விட்டு விலககிறாரா உதயநிதி ஸ்டாலின்?

சினிமாவை விட்டு விலககிறாரா உதயநிதி ஸ்டாலின்?

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவை விட்டே விலக உள்ளதாக சொல்லப்படுகிறது.

 
திமுகவின் அடுத்த தலைமுறை முகமாக முன்னிறுத்தப்படுகிறார் உதயநிதி ஸ்டாலின். திமுகவில் முக்கிய இடத்தை பிடிப்பதற்காகவும், மக்கள் மத்தியில் முகம் பிரபலம் ஆவதற்காகவும்தான் சினிமாவிலேயே அவர் நடிக்க ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால் சினிமாவின் பக்கம் கவனத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 
இதனால் இப்போது வரை ஒத்துக்கொண்ட படங்களை நடித்துக் கொடுத்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்க அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது கடைசி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆசிரியர் - Editor II