அரசிடன் 1.3 பில்லியன் இழப்பீடு கோரும் Ile-de-France Mobilités!!

அரசிடன் 1.3 பில்லியன் இழப்பீடு கோரும் Ile-de-France Mobilités!!
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இழப்பை அரசே நிர்வர்த்தி செய்யவேண்டும் என இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் கோரியுள்ளார். 
 
2021 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இழப்பு தொகையான 1.3 பில்லியன் யூரோக்களை அரசு முடிந்த அளவு வேகமாக தரவேண்டும் என இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து துறை தலைவர் Valérie Pécresse கோரியுள்ளார். 
 
"இல் து பிரான்ஸ் போக்குவரத்துக்கான இழப்பீடு ஆதரவு அவசரமானது. இது இல் து பிரான்ஸ் மற்றும் தேசிய பொருளாதாரம் இரண்டினது மறுமலர்ச்சியிலும் பங்களிக்கின்றது!” என மாகாண முதல்வர்  Valérie Pécresse கோரியுள்ளார். 
ஆசிரியர் - Editor II