கொரோனா நிலவரம்! - தொற்றுக்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு!!

கொரோனா நிலவரம்! - தொற்றுக்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 18.181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு தொற்று அதிகரிப்பாகும். தொற்று வீதம் 2.3% இல் இருந்து 2.6% விதமாக உயர்வடைந்துள்ளது.  இதுவரை 5.890.062 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில்  6.912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ‘குறிப்பிடத்தக்க’ மாறுதல்கள் எதுவும் இல்லை.

மேலு, கடந்த 24 மணிநேரத்தில் 33 ப்;ஏர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 111.554 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 58.049 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.

ஆசிரியர் - Editor II