சிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் அப்டேட்

சிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் அப்டேட்

சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாக உள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. சிம்பு, திரிஷாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016-ம் ஆண்டு 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படம் வெளியானது. இப்படமும் சூப்பர் ஹிட்டானது.

இவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ள படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
ஆசிரியர் - Editor II