ஓகஸ்ட் இறுதிக்குள் 50 மில்லியன் பேருக்கு தடுப்பூசி! - பிரதமரின் புதிய திட்டம்!!..!!...!!

ஓகஸ்ட் இறுதிக்குள் 50 மில்லியன் பேருக்கு தடுப்பூசி! - பிரதமரின் புதிய திட்டம்!!..!!...!!
வாரம் ஒன்றுக்கு நான்கு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். 
இன்று புதன்கிழமை தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் போது இதனை அவர் தெரிவித்தார். ”வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 50 மில்லியன் பேருக்கு அவர்களுக்கான முதலாவது தடுப்பூசி போடப்படும்!”! என தெரிவித்த பிரதமர், வரும் வாரத்தில் இருந்து, வாரம் ஒன்றுக்கு நான்கு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட உள்ளோம்!” எனவும் தெரிவித்தார். 
முன்னதாக ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 40 மில்லியன் பேருக்கான தடுப்பூசி போடப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஜூலை மாத இறுதிக்குள் அந்த 40 மில்லியன் எனும் இலக்கை அடைந்துவிடுவோம் என பிரதமர் தெரிவித்தார். 
இறுதியாக வெளியான தரவுகளின் படி, தற்போது 38,184,499 பேருக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - Editor II