அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்கவுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளதுடன், அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்றடையவுள்ளது.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஆசிரியர்கள் தொடர்ச்சியாக 11 நாட்களாகவும் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II