நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 6 மணிமுதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் கீழ் பிரிவே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II