ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றதால் கோட்டை பகுதியில் பல்வேறு வீதிகளில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஆசிரியர் - Editor II