மெற்றோ சுரங்க வெளியேற்றத்தில் விபத்து! - ஆறு பேர் காயம்!!

மெற்றோ சுரங்க வெளியேற்றத்தில் விபத்து! - ஆறு பேர் காயம்!!
 
Château-Rouge தொடருந்து நிலைய ‘வெளியேறும்’ பகுதியில் உள்ள மின் தூக்கியில் திடீரென விபத்து ஏற்பட்டது. பெண் ஒருவர் முதலில் மின் தூக்கிக்குள் சிக்கிக்கொண்டு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் மேலும் ஒருவரது காலும் சிக்கொண்டு பலத்த காயம் ஏற்பட்டது. 
 
18 அம் வட்டார காவல்துறையினர் Boulevard Barbès பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் சம்பவ இடத்துக்கு மிக விரைவாக வந்தனர். மின் தூக்கியை நிறுத்த முற்பட்டபோதும் அது நிற்கவில்லை. 
 
பின்னர் பலத்த போராட்டத்தின் பின்னர் மின்சாரத்தை தடை செய்து மின் தூக்கி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் மொத்தமாக ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் பலத்த காயமடைந்ததுடன் அவர்களுக்கு எட்டு மற்றும் பதினொரு தையல்கள் போடப்பட்டன. 
 
மின் தூக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக கண்காணிப்பு கமராக்களை ஆராய்ததன் பின்னர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். குறித்த மின் தூக்கியை பராமரிக்கும் உரிமையாளர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றார். 
ஆசிரியர் - Editor II