கொரோனா தொற்றில் இருந்து மேலும் 997 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 997 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 997 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 64 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 89 ஆயிரத்து 577 ஆக பதிவாகியுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II