பரிசில் 9 பேர் கைது! - போர்க்களமாக மாறிய சோம்ப்ஸ்-எலிசே!!

பரிசில் 9 பேர் கைது! - போர்க்களமாக மாறிய சோம்ப்ஸ்-எலிசே!!
இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டற்றின் முடிவில் பரிசில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
Pass sanitaire (சுகாதார பாஸ்) நடைமுறைக்கு எதிராக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைநகர் பரிசில் 11.000 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. முதலில் அமைதியாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. 
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதமாக்க, காவல்துறையினர் களத்தில் இறங்கினர். பின்னர் இந்த மோதல் 'இரு தரப்பு' மோதலாக மாறியது. 
 
குறிப்பாக சோம்ப்ஸ்-எலிசேயில் மிகுந்த வன்முறை காட்சிகள் பதிவானது. தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். 
 
  "காவல்துறையினர், ஜொந்தாமினர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!" என உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்தார். அத்தோடு "ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II