தடுப்பூசி மையத்தில் மின்சாரத்தடை! - 3.500 தடுப்பூசிகளுக்கு ஆபத்து! - 17 வயது இளைஞன் கைது!!

தடுப்பூசி மையத்தில் மின்சாரத்தடை! - 3.500 தடுப்பூசிகளுக்கு ஆபத்து! - 17 வயது இளைஞன் கைது!!
தடுப்பூசி மையம் ஒன்றில் மின் தடையை ஏற்படுத்திய 17 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை Doubs நகரில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் மின் தடை ஏற்பட்டது. நீண்ட குழப்பத்திற்கு பின்னர்  17 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டடோடு, மின் தடை சரிசெய்யப்பட்டது. குறித்த தடுப்பூசி மையத்துக்கு அருகே உள்ள மின்வழங்கியில் குறித்த இளைஞன் தடையை ஏற்படுத்தியிருந்தான். 
 
பின்னர் விசாரணைகளில், குறித்த இளைஞன் “வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கில்” இதனை செய்யவில்லை எனவும், எந்த அரசியல் காரணங்களும் இதில் இல்லை எனவும், அறியாமையில் இதனை மேற்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான். 
 
அதேவேளை, குறித்த தடுப்பூசி மையத்தில் குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ]3.500 தடுப்பூசிகள் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,நேற்று வெள்ளிக்கிழமை காலை குறித்த தடுப்பூசிகள் “நல்ல நிலையிலேயே” உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவை பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - Editor II