இலங்கையில் நேற்று 3 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இலங்கையில் நேற்று 3 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இலங்கையில் நேற்று மாத்திரம் 320,272 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 271,402 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் இரண்டாவது டோஸ் 11,485 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் 37,385 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் இதுவரை 7,434,297 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 1,806,612 பேருக்கு முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II