நீண்ட கால கொள்கை கட்டமைப்பு நாட்டுக்கு அவசியம் – ரணில்

நீண்ட கால கொள்கை கட்டமைப்பு நாட்டுக்கு அவசியம் – ரணில்

சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை நிராகரித்து சீரான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவுடன் ஒரு நல்ல உறவைப் பேண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு தேவைப்படுவது பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி அல்ல, மாறாக நாட்டை கொண்டு நடத்த நீண்ட கால கொள்கை கட்டமைப்பு என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சரியான கொள்கை கட்டமைப்பை நிறுவ தவறியமையே நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளைப் போலவே அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் பொதுவான கொள்கைகள் நாட்டுக்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர் - Editor II