தொடர்ச்சியாக உணரப்படும் நிலநடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!

தொடர்ச்சியாக உணரப்படும் நிலநடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்!

ஹைதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அதேநேரம் சிக்கிம் மாநிலத்திலும் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவின்  பல பாகங்களிலும் அண்மைக்காலமாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மக்கள் அச்சத்தை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II