தோல்வியில் முடிந்த பார்பிகியூ தயாரிப்பு! - வீடு பற்றி எரிந்தது!- இருவர் காயம்!!

தோல்வியில் முடிந்த பார்பிகியூ தயாரிப்பு! - வீடு பற்றி எரிந்தது!- இருவர் காயம்!!
பார்பிகியூ உணவு தயாரிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் சனிக்கிழமை பகல் இச்சம்பவம் Cézac, Gironde நகரில் இடம்பெற்றுள்ளது. பகல் 2 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடு ஒன்றில் வசிக்கும் தம்பதியினர், பார்பிகியூ உணவு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக வெடித்து சிதறி தீப்பற்றியது. இதில் வீட்டின் மேல் தீ பரவி எரிய ஆரம்பித்துள்ளது. 
 
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள்ளாக நிலமை கட்டுப்பாட்டை மீறிச் சென்று, வீடு முற்றாக எரிந்ததுடன், வீட்டின் கராஜ் பகுதியும் முற்றாக எரிந்தது. 57 மற்றும் 46 வயதுடைய இருவர் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். 
 
இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். 
ஆசிரியர் - Editor II