தடுப்பூசியில் புதிய மைல்கல்! - ஜனாதிபதி அறிவிப்பு!!

தடுப்பூசியில் புதிய மைல்கல்! - ஜனாதிபதி அறிவிப்பு!!
தடுப்பூசி போடும் பணி நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில், தற்போது கிட்டத்தட்ட 60% வீதமான மக்கள் தங்கள் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் தெரிவிக்கும் போது, ‘மிக விரைவில் 40 மில்லியன் பேருக்கான தடுப்பூசியினை எட்டிவிடுவோம். நாங்கள் ஓய்வெடுக்கவில்லை. தொடர்ந்து முன்னேறிக்கொண்டே உள்ளோம். நாளை திங்கட்கிழமை (இன்று) 40 மில்லியன் எனும் இலக்கை எட்டிவிடுவோம்!’ என ஜனாதிபதி தெரிவித்தார். 
 
இதுவரை 39.94 மில்லியன் பேர், அதாவது நாட்டு மக்கள் தொகையில் 59.2%  வீதமானோர் தங்களுக்கான முதலாவது தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 
 
அதேவேளை, கிட்டத்தட்ட 50% வீதமானோர் (33.2  மில்லியன் பேர்) தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூலை மாத இறுதிக்குள் இந்த சாதனை எட்டப்படும் என முன்னர் அரசு அறிவித்திருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்பாகவே இந்த மைல்கல்லை அரசு எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
ஆசிரியர் - Editor II