ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கம்

ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கம்

ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனலை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். 

மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது சிவக்குமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. 
இவர் ஹிப்ஹாப் தமிழா என்கிற யூடியூப் சேனலை நிர்வகித்து வருகிறார். இதில் அவர் இயக்கிய சுயாதீன பாடல்கள் பதிவேற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது. அதில் அவர் இதுவரை பதிவிட்டிருந்த அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டு உள்ளன. ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனலை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II