ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு

ஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு

சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த இப்படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, முருகதாஸ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை செய்த திரைப்படத்தை தடை விதிக்க முடியாது எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். 


ஆசிரியர் - Editor II