செல்லுபடியாகாத சுகாதார பாஸ்! - கேளிக்கை பூங்கா இயக்குனர் மீது தாக்குதல்!!

செல்லுபடியாகாத சுகாதார பாஸ்! - கேளிக்கை பூங்கா இயக்குனர் மீது தாக்குதல்!!
செல்லுபடியற்ற சுகாதார பாஸ் வைத்திருந்த ஒருவர் கேளிக்கை பூங்கா இயக்குனர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். 
 
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த ஜூலை 21 ஆம் திகதியில் இருந்து கேளிக்கை பூங்காக்களுக்குச் செல்ல சுகாதார பாஸ் (pass sanitaire) கட்டாயமாகும். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை Moselle  நகரில் உள்ள  Walygator  பூங்காவுக்கு வருகை தந்த ஒருவரிடம் சுகாதார பாஸ் சோதனையிடப்பட்டது. கேளிக்கை பூங்காவின் ஊழியர் ஒருவர் மேற்கொண்ட சோதனையில், வாடிக்கையாளர் வைத்திருந்த சான்றிதழ் செல்லுபடியற்றது என தெரியவந்துள்ளது. 
 
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்த போதும், சுகாதார பாஸ் செல்லுபடியற்றது என தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததோடு, அவருக்கும் கேளிக்கை விடுதி நிர்வாகிக்கும் மோதலும் வெடித்தது. 
 
பின்னர் கேளிக்கை பூங்கா பாதுகாவலர்களால் அவர் கைது செய்யப்பட்டு ஜொந்தாமினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைகளில் குறித்த வாடிக்கையாளர் தனது இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதும் TousAntiCovid  செயலியில் அவரது சான்றிதழ் மேம்படுத்தப்படாமையால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆசிரியர் - Editor II