வாடிக்கையாளர்களை பரிசோதிக்காவிட்டால் ஒருவருட சிறை மற்றும் 9000 யூரோக்கள் தண்டப்பணம்!!

வாடிக்கையாளர்களை பரிசோதிக்காவிட்டால் ஒருவருட சிறை மற்றும் 9000 யூரோக்கள் தண்டப்பணம்!!
வாடிக்கையாளர்களிடம் சுகாதார பாஸ் சோதனை செய்யாத நிர்வாகங்களுக்கு ஒருவருட சிறைத்தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என அறிய முடிகிறது. 
 
ஓகஸ்ட் மாதத்தில் இருந்து சுகாதார பாஸ் நடைமுறைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் பெரும்பான்மையான வாக்குகளோடு அந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், உணவகம், கஃபேக்கள் மற்றும் போக்குவரத்துக்களில் சுகாதார பாஸ் சோதனையிடப்பட்டு வாடிக்கையாளர்களை/பயணிகளை அனுமதிக்காவிட்டால் நிர்வாகத்தினருக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல்தடவை இத்தப்பை செய்தால் 1500 யூரோக்கள் தண்டப்பணமும், இரண்டாவது தவறுக்கு 3000 யூரோக்கள் தண்டப்பணமும்,45 நாட்களுக்குள் மூன்று தடவைகள் இதே தவறை மீண்டும் செய்தால் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், 9000 யூரோக்கள் தண்டப்பணமும் அறவிடப்படும் என அரசு முன்வைத்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - Editor II